செய்திகள்

குடிபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளியை அடித்து கொன்ற உறவினர்

Published On 2019-03-11 15:45 IST   |   Update On 2019-03-11 15:45:00 IST
கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளியை உறவினர் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்தவர் மைதீன் பாதுசா (வயது 33). கூலித் தொழிலாளி.

நேற்று இரவு இவர் குடிபோதையில் செல்வபுரம் தில்லை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த உறவினரான சுல்தான் பாதுசா என்பவர், மைதீன் பாதுசாவிடம் மது குடித்து விட்டு இங்கு வரக்கூடாது என கூறினார்.இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சுல்தான் பாதுசா அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியால் மைதீன் பாதுசாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் மயங்கிய மைதீன் பாதுசா சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுல்தான் பாதுசா அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மைதீன் பாதுசாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான சுல்தான் பாதுசாவை தேடி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News