செய்திகள்

மது போதையில் சாலையோரம் தூங்கிய தொழிலாளி கார் மோதி பலி

Published On 2019-03-05 15:54 IST   |   Update On 2019-03-05 15:54:00 IST
மது போதையில் சாலையோரம் தூங்கிய தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர், புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). கட்டிட தொழிலாளி.

நேற்று மாலை மது போதையில் இருந்த ராமதாஸ் அதே பகுதி இந்திரா காந்தி பிரதான சாலை ஓரத்தில் விழுந்தார். பின்னர் அங்கேயே தூங்கி விட்டார்.

இந்த நிலையில் அவ்வழியே சென்ற கார் திடீரென சாலையோரத்தில் கிடந்த ராமதாஸ் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று காலை சிகிச்சை பலனின்றி ராமதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஜெரால்டு பென்ஜமின் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News