செய்திகள்

கேளம்பாக்கம் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் கொள்ளை

Published On 2019-03-04 14:57 IST   |   Update On 2019-03-04 14:57:00 IST
கேளம்பாக்கம் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை ரூ. 25 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன்குமார். வேளச்சேரியில் உள்ள தனியார் செல்போன் நிறுவன அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு சென்று இருந்தார்.

இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா பதிவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Similar News