செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு

Published On 2019-03-01 22:00 IST   |   Update On 2019-03-01 22:00:00 IST
உத்திரமேரூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 24 பவுன் நகை திருடப்பட்டது.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மானாம்பதி கண்டிகையை சேர்ந்தவர் பாலசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரெஜினா. ஓய்வு பெற்ற ஆசிரியை.

நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் சின்னப்பா, பாலசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து பாலசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக பாலசாமி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பாலசாமி பெருநகர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

மோப்பநாய் அஜய் வரவழைக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜெபஸ்டின் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News