செய்திகள்

ஈரோட்டில் உருக்கமான சம்பவம் - காதலிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-02-25 11:48 IST   |   Update On 2019-02-25 13:41:00 IST
“உனக்கு துரோகம் செய்து விட்டேன் மன்னித்து விடு” என காதலிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Love #YouthSuicide
ஈரோடு:

ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மேம்பாலத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது தற்கொலை செய்துகொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை பிரேத பரிசோதனைக்காக அந்த வாலிபரின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



தற்கொலை செய்துகொண்ட வாலிபர் நீலம் மற்றும் கருப்பு கலர் கோடு போட்ட முழுக்கைச் சட்டையும் வெள்ளை கலர் பேண்ட் அணிந்து இருந்தார் அவரது பேண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது அதில் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்ததாக மன்னிப்பு கேட்பதாகவும் அடுத்த ஜென்மத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தையாக பிறப்பேன் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி இருந்தார். அம்மா என்னை மன்னித்துவிடு என்றும் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Love #YouthSuicide
Tags:    

Similar News