செய்திகள்

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-02-17 08:30 GMT   |   Update On 2019-02-17 08:30 GMT
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News