செய்திகள்

புறவழிச்சாலை - பஸ் நிலைய பிரிவு பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

Published On 2019-02-08 17:08 GMT   |   Update On 2019-02-08 17:08 GMT
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் விபத்துக்கள் நடந்து வருவதால் இதனை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் விபத்துக்கள் நடந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். பாலக்கோடு வழியாக தருமபுரி மற்றும் சுற்றுலா தளமான ஒகேனக்கல்லுக்கு தினந்தோரும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் வந்துசெல்கின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பலர் என அதிக பொதுமக்கள் இப்பகுதியில், பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் பிரிவு ரோட்டில் தருமபுரியை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாலானோர் அதிவேகத்திலேயே செல்வர். இப்பகுதி பிரிவு ரோட்டில் சென்டர் மீடியன் இன்றி காணப்படுவதால், வளைவுகளில் வளையும்போது எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

புறவழிச்சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் பிரிவு பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைவது மட்டுமின்றி, இரவு நேரத்தில் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்திற்கு உள்ளாகுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் நெடுஞ்சாலை பிரிவில் சென்டர் மீடியன் மற்றும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News