செய்திகள்

பட்ஜெட் உரை நிறைவு- சட்டசபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Published On 2019-02-08 07:52 GMT   |   Update On 2019-02-08 07:52 GMT
தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி முடிந்ததும், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
சென்னை:

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.



காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
Tags:    

Similar News