செய்திகள்

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2019-01-29 10:21 GMT   |   Update On 2019-01-29 10:21 GMT
வைகை அணையில் இருந்து கள்ளந்திரி பாசனத்திற்காக இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. #Vaigaidam
கூடலூர்:

பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இம்முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வைகை அணையில் இருந்து ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மதுரை கள்ளந்திரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

கடந்த வாரம் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை 8 மணி முதல் கூடுதலாக 500 கன அடி சேர்த்து 560 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு முற்றிலும் நின்று விட்டது. அணையின் நீர்மட்டம் 53.77 அடியாகவும் இருப்பு 2526 மி.கன அடியாகவும் உள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 300 கன அடி. இருப்பு 2168 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 42.40 அடி. திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.28 அடி. திறப்பு 9 கன அடி.

கூடலூரில் 1.7, வைகை அணையில் 2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #Vaigaidam

Tags:    

Similar News