செய்திகள்

108 ஆம்புலன்சில் வேலை செய்த போலி பெண் டாக்டர் சிக்கினார்

Published On 2019-01-29 07:55 GMT   |   Update On 2019-01-29 07:55 GMT
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணியாற்றிய போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். #FakeDoctor
சென்னை:

வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.

போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
Tags:    

Similar News