செய்திகள்

கும்பகோணத்தில் மகளிர் குழுவில் வசூலான ரூ.4 லட்சம் பணத்துடன் தாய் மாயம்- போலீசில் மகள் புகார்

Published On 2019-01-28 20:28 IST   |   Update On 2019-01-28 20:28:00 IST
கும்பகோணத்தில் மகளிர்குழு பணத்தை வங்கிக்கு கட்ட சென்ற பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி சூர்யா (வயது 23). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார்.

கடந்த 17-ந்தேதி குழு மூலம் வசூலான ரூ.4 லட்சத்தை வங்கியில் செலுத்த சூர்யா முடிவு செய்து அதனை தனது தாய் தேவி (42) என்பவரிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரும்படி கூறியுள்ளார். அதனை பெற்று சென்ற தேவி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. 

இந்த தகவல் வெளியே தெரிந்தால் குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று சூர்யா கலக்கமடைந்தார். ஆனாலும் தனது தாயை பற்றி தகவல் எதுவும் கிடைக்கததால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி நேற்று கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா தாமதமாக புகார் செய்ததால் தேவி பணத்துடன் மாயமானது திட்டமிட்ட  நாடகமா? இதில் மோசடி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Tags:    

Similar News