செய்திகள்

ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் காங்கிரசில் இணைந்தார்

Published On 2019-01-26 14:05 IST   |   Update On 2019-01-26 14:05:00 IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். #Congress
சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பதர்சயீத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி. திருவல்லிக்கேணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்தவர்.

தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பதர்சயீத் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து விலகியது குறித்து பதர்சயீத் கூறியதாவது:-



ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக பாடுபடுவோருக்கு உரிய மரியாதை இல்லை. இப்போது அங்கு பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். எனவே அந்த கட்சியில் இருந்து விலகினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்கண்ணன், த.மா.கா. முன்னாள் கவுன் சிலர் நாகராஜன், உள்பட சிலர் காங்கிரசில் இணைந்தனர்.  #Congress



Tags:    

Similar News