இந்தியா

எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Published On 2026-01-04 23:08 IST   |   Update On 2026-01-04 23:08:00 IST
  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு முதல் மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்தார்.
  • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பினார்.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், மாநிலத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்தவேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்கிறது. இது நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை தாக்குகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News