செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் இன்று 61 இடங்களில் எருது விடும் விழா

Published On 2019-01-17 16:50 GMT   |   Update On 2019-01-17 16:50 GMT
தருமபுரி மாவட்டத்தில் இன்று 61 இடங்களில் எருது விடும் விழா நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கூளி ஆட்டம் என்ற பெயரில் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. காளையின் இருபுறமும் கயிற்றை கட்டி விடும் விழாதான் கூளி ஆட்டம் ஆகும். 

தருமபுரி மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் இந்த விழா நடந்தது. இன்று மல்லாபுரம், அதியமான்கோட்டை உள்பட 61 இடங்களில் இந்த எருது விடும் விழா நடக்கிறது. 

தருமபுரி நகரில் சாலை விநாயகர் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாட்டை விடுவார்கள். இதேபோல அரூர் கடை வீதியிலும் இன்று எருது விடும் விழா நடக்கிறது. இதில் திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News