செய்திகள்

தமிழ்நாட்டில் பா.ஜனதா யாருடன் கூட்டணி?- பிரதமர் மோடி பதில்

Published On 2019-01-10 13:52 IST   |   Update On 2019-01-10 13:52:00 IST
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். #BJP #PMModi
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

தர்மபுரி மற்றும் கடலூர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் இதில் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.

மோடியிடம் தமிழக நிர்வாகி ஒருவர், “பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ரஜினி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” என்று கேட்டார்.

அதற்கு மோடி பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக்கான வாசல் திறந்தே இருக்கிறது. பழைய நண்பர்களையும் (கட்சிகளையும்) வரவேற்க பா.ஜனதா தயாராக உள்ளது” என்றார்.



மோடி மேலும் கூறுகையில், “கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜனதா செயல்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணியை வெற்றிகரமாக நடத்தியவர் வாஜ்பாய்.

தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு இணைந்தே பா.ஜனதா ஆட்சி அமைக்கும்” என்றார். #BJP #PMModi
Tags:    

Similar News