ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும்

Published On 2025-12-06 07:55 IST   |   Update On 2025-12-06 07:55:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

ரிஷபம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பண நெருக்கடி உண்டு.

மிதுனம்

யோகமான நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். அரசுவழிக் காரியங்களில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.

கடகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற வீட்டுப் பராமரிப்புப் பணியைத் தொடருவீர்கள்.

சிம்மம்

சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத்தகவல் வந்து சேரும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

புகழ்மிக்கவர்களின் பழக்கம் ஏற்படும். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம் உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்

முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். வரவை விடச் செலவு கூடும்.

தனுசு

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீகள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மகரம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்.

கும்பம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும்.

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

Tags:    

Similar News