செய்திகள்

தஞ்சை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-09 17:02 IST   |   Update On 2019-01-09 17:02:00 IST
அரசு ஊழியர்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் மன்ற மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 33 பாட பிரிவுகள் வேலை வாய்ப்புக்கு உகந்தல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News