செய்திகள்

உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

Published On 2019-01-07 12:24 GMT   |   Update On 2019-01-07 12:24 GMT
அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு பார்வர்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராம நிர்வாக அதிகாரி ரகுபதி எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சிக்கொடியை ஏற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காசி, பாஸ்கரபாண்டி உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News