செய்திகள்

பெண்களுக்கு நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் - எடப்பாடி பழனிசாமி 10ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Published On 2019-01-07 07:33 GMT   |   Update On 2019-01-07 07:37 GMT
பெண்களுக்கு நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #EdappadiPalanisamy
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை புரட்சித் தலைவி தொடங்கி வைத்தார். தற்போது 75 ஆயிரத்து 448 பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

8 லட்சத்து 72 ஆயிரத்து 152 பெண்களுக்கு 32 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் பெண்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.



வருகிற 10-ந்தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 77 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.2500 மதிப்புள்ள கோழிக் குஞ்சுகள் கூண்டுடன் வழங்கப்படும். இதற்கு 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #EdappadiPalanisamy

Tags:    

Similar News