செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்: தி.மு.க. மருத்துவ அணி 5-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-02 08:43 GMT   |   Update On 2019-01-02 08:43 GMT
சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தி உயிரோடு விளையாடும் அதிமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தி.மு.க. மருத்துவ அணி சார்பில் 5-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #dmk #pregnantwoman #hivblood

சென்னை:

தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர் என்.வி.என்.சோமு கனிமொழி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும், ஏற்கனவே தமிழகம் முழுவதும் உயிர் கொல்லி நோயான “டெங்கு” மற்றும் “பன்றிக்காய்ச்சல்” காரணமாக பலர் மரணமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூரைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு உயிர்கொல்லி நோயானா எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்தி, அந்த ஏழை கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையையே பலி வாங்கியுள்ளது.

தொடர்ந்து ஏழை, எளிய தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆளும் அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. மருத்துவ அணியின் சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dmk #pregnantwoman #hivblood    

Tags:    

Similar News