செய்திகள்

ஈரோடு அருகே விபத்து: வாட்ச்மேன் பலி

Published On 2018-12-31 15:52 IST   |   Update On 2018-12-31 15:52:00 IST
ஈரோடு அருகே விபத்தில் வாட்ச்மேன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் காதர் ஷெரிப் (வயது 52). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு மசூதியில் வாட்ச் மேனாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு கருங்கல்பாளையம் அடுத்த அசோகபுரம் ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு வளைவில் காதர் ஷெரிப் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக காதர் ஷெரிப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர் ஷெரிப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News