செய்திகள்

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை

Published On 2018-12-24 17:47 GMT   |   Update On 2018-12-24 17:47 GMT
பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கூடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த மழை பல இடங்களில் ஏமாற்றி சென்றது. புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரியை விட குறைவாகவே பதிவானது.

இந்நிலையில் நேற்று காலை முதல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியாறு அணையின் நீர் மட்டம் 125.05 அடியாக உள்ளது. அணைக்கு 186 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3,629 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் 56.23 அடி. வரத்து 659 கன அடி. திறப்பு 60 கன அடி. இருப்பு 2,921 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 50 அடி. வரத்து 9 கன அடி திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 119.85 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 27 கன அடி.

பெரியாறு 7, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News