செய்திகள்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு தகவல் தொடர்பு கருவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Published On 2018-12-17 21:27 GMT   |   Update On 2018-12-17 21:27 GMT
நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார். #EdappadiPalanisamy #ADMK
சென்னை:

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீன்பிடி படகு குழுக்களுக்கு ஆழ்கடல் தகவல் தொடர்பு சாதனைங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நேவிக் என்ற செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி பெறும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவியை 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார்.

நேவிக் கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் செயல்படுகிறது. வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று, புளூடூத் இணைப்பு மூலம் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட மீனவர்களின் கைப்பேசிக்கு அனுப்புகிறது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News