செய்திகள்

அரசு டாக்டர்களை அழைத்து பேச வேண்டும்- தினகரன் டுவீட்

Published On 2018-12-04 07:21 GMT   |   Update On 2018-12-04 07:21 GMT
நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வுகாண வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். #DoctorsStrike #TTVDhinakaran
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு அதை கண்டுகொள்ளாததால் இன்று மாநிலம் முழுக்க புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற போராட்டத்தை அறிவித்துள்ளது அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு.

இந்த போராட்டம் இதே மாதத்தில் மேலும் 4 நாட்கள் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி தலைமை மருத்துவமனை வரை நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட வாய்ப்பு உள்ளது.


எனவே நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DoctorsStrike #TTVDhinakaran
Tags:    

Similar News