செய்திகள்

தருமபுரியில் தக்காளி விலை வீழ்ச்சி

Published On 2018-12-02 15:17 GMT   |   Update On 2018-12-02 15:17 GMT
தருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 கிலோ ரூ. 9 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரியில் பல பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தருமபுரி நகர் பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் கடைகளுக்கு பாலக்கோடு, பென்னாகரம், அதகபாடி, காரிமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் வெளிமாநிலமான ஆந்திராவில் இருந்தும் தக்காளி வருகிறது. எனவே தக்காளியின் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தக்காளி 1 கிலோ ரூ.9-க்கு விற்பணை செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

தற்போது மழை நன்றாக பெய்து வருவதால் தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை மிகவும் குறைந்துள்ளது.  எனவே தக்காளி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு தக்காளி விற்பணையில் கிடைக்கக்கூடிய லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News