செய்திகள்

புதிய கார்டுகள் வழங்குவதால் சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழந்து விடுமா?- வங்கி அதிகாரிகள் விளக்கம்

Published On 2018-12-02 05:01 GMT   |   Update On 2018-12-02 05:01 GMT
புதிய கார்டுகள் வழங்கப்படுவதால், ‘சிப்’ பொருத்தப்படாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழந்துவிடாது என்றும், தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். #ATMCard
சென்னை:

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் பலருடைய பாக்கெட்டுகளையும் வண்ண, வண்ண கலரிலான ஏ.டி.எம். டெபிட், கிரெடிட் கார்டுகள் அலங்கரித்து வருவதை பார்க்கமுடிகிறது.

முன்பு உள்ள ஏ.டி.எம். கார்டுகளில் ரகசிய குறியீட்டு எண் (4 இலக்க பாஸ்வேர்ட்) இல்லாமல் மற்றொருவர் பணம் எடுத்து மோசடி செய்யும் நிலை இருந்தது. இதனால் அந்த ஏ.டி.எம். கார்டுகள் பாதுகாப்பு இல்லாததாக வங்கிகள் கருதின. இதையடுத்து புதிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ‘சிப்’ பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


பழைய ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டுகளை வங்கிகள் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ‘சிப்’ பொருத்தப்படாத ஏற்கனவே இருக்கும் பழைய ஏ.டி.எம். கார்டுகள் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) முதல் செயல் இழந்துவிடும் என்று தகவல் பரவியது. இதனை வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மேலும் படிப்படியாக புதிய தொழில்நுட்பத்துக்கு ஏ.டி.எம். கார்டுகள் மாற்றப்பட்டு வருவதாகவும், பழைய ஏ.டி.எம். கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  #ATMCard
Tags:    

Similar News