செய்திகள்

பொள்ளாச்சி அருகே மிட்டாய் கம்பெனியில் ரூ. 70 ஆயிரம் திருட்டு

Published On 2018-11-29 17:32 IST   |   Update On 2018-11-29 17:32:00 IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மிட்டாய் கம்பெனியின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடி சென்ற மர்நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் பொள்ளாச்சி- கோட்டூர் ரோட்டில் சொந்தமாக மிட்டாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கம்பெனியில் காசாளராக வேலை பார்க்கும் சுனிதா வழக்கம் போல கம்பெனியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலையில் கம்பெனியை திறப்பதற்காக வந்தார். அப்போது கம்பெனியின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சுனிதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த கல்லாவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சுனிதா, சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்
Tags:    

Similar News