சினிமா செய்திகள்

படப்பிடிப்பு முடிந்து 37 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் படம்!

Published On 2026-01-23 09:01 IST   |   Update On 2026-01-23 09:01:00 IST
ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக 1980, 90களில் ரஜினி, சல் பஸ், ஹும் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருந்தார்.

அந்த வகையில் ரஜினி நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா கவுன்" (உங்களில் யார் ராஜா) என்ற இந்தி படம் 1989 இல் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.

மறைந்த இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளரான ராஜா ராய் உடைய மகன் இறந்தது, இயக்குனரின் மறைவு ஆகியவற்றால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படம் ஏப்ரல் 2026-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் 4K தரத்திற்கு மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. 

Tags:    

Similar News