null
#T20WorldCup இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பிரபலங்கள்
- இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா எக்ஸ் தள பக்கத்தில் "இந்தியா தி சாம்பியன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 'என்ன ஒரு அணி, என்ன ஒரு சிறப்பான ஆட்டம்... நாட்டிற்கு என்ன ஒரு பெருமையான தருணம். டி20 உலகக் கோப்பையை வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், 'நாம ஜெயிச்சிட்டோம், என்ன ஒரு போட்டி' என தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் எக்ஸ் தள பக்கத்தில், சக்திவாய்ந்த அணியின் சக்திவாய்ந்த வெற்றி பல சாதனைகளை முறியடித்துள்ளது. சஞ்சு, பும்ரா, இஷான், ஹார்டின், வருண், ஆக்சர் துபே, அபிஷேக் மற்றும் சூர்யாவை நேசிக்கிறேன்... என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம்பிரபு, 'டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்' என்று கூறியுள்ளார்.