செய்திகள்

பெரம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் - வெற்றிவேல் பேட்டி

Published On 2018-11-27 09:39 GMT   |   Update On 2018-11-27 09:39 GMT
பெரம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று வெற்றிவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vetrivel #Election

ராயபுரம்:

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அரசு தேர்தலை கண்டு பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை ‘ரெட்அலர்ட்’ காரணம் காட்டி சந்திக்காததை போல ‘கஜா’ புயலை காரணம் காட்டி இடைத்தேர்தல்களை இந்த அரசு சந்திக்காது.

இடைத்தேர்தலுக்கு கட்சி பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். பின்னர் அவர்களாகவே ரெட்அலர்ட்டும் போடுவார்கள். இந்த மாதிரி ஏமாற்றும் வி‌ஷயத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.


தேர்தல் கூட்டணி குறித்து கட்சி இறுதி முடிவு செய்யும். திருமாவளவன்-டி.டி.வி. தினகரன் சந்திப்பு சாதாரணமானது. எங்களது கட்சி முடிவு செய்தால் நான் மீண்டும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவேன்.

சிந்து பெண் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தான் விளக்கம் அளிக்க வேண்டும். என்னிடம் உள்ள ஆதாரங்களை ஏற்கனவே வெளியிட்டு விட்டேன்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு பார்த்து எந்த பயனும் இல்லை. மத்திய அரசுதான் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.

கஜா புயல் பாதிப்பில் மந்த நிலையில் நிவாரணப் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Vetrivel #Election

Tags:    

Similar News