செய்திகள்

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவை இல்லை- கிருஷ்ணசாமி

Published On 2018-11-27 07:33 GMT   |   Update On 2018-11-27 07:33 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
தேனி:

தேனியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை தேவை இல்லை, எங்களுக்கான அடையாளமும் உரிமையும் வேண்டும். தமிழகத்தில் கஜா புயலால் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடத்த கூடாது. அவ்வாறு நடத்தினால் முறைகேடு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். புயல் நிவாரண பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒரு சிலரின் தூண்டுதலால் போராட்டங்கள் நடந்து வருகிறது.


நடிகர் கமல்ஹாசன் ஒரு தரப்பினரை கொம்பு சீவிவிட்டு வருகிறார். அதனால்தான் அவரது தேவர்மகன்-2 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நான் கமல்ஹாசனுக்கு எதிரானவன் இல்லை. சினிமா மூலம் தத்துவம் அறிவுரைகளை எடுத்துகூறிய காலம் மாறி தற்போது தனிநபர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. காதல் தற்கொலைகள், ஆணவ படுகொலைக்கு சினிமாவே முக்கிய காரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
Tags:    

Similar News