செய்திகள்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

Published On 2018-11-24 09:06 GMT   |   Update On 2018-11-24 09:06 GMT
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொன்னேரி:

பொன்னேரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

அப்போது, மக்கள் நேரடியாக கலெக்டரிடம் மனு அளித்து, அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்று கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள், தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

இதில் பெரும்பாலான மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பட்டா மற்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்த முகாமில் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தாசில்தார்கள் புகழேந்தி சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News