செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் கனமழை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2018-11-24 11:16 IST   |   Update On 2018-11-24 11:16:00 IST
தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #HeavyRain
காரைக்கால்:

தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வந்தது.

இன்று அதிகாலை காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேப்போல் திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. #HeavyRain
Tags:    

Similar News