செய்திகள்

சேலம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2018-11-22 16:56 GMT   |   Update On 2018-11-22 16:56 GMT
சேலம் அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

கருப்பூர்:

சேலத்தை அடுத்த கருப்பூர் தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சேலம் குரங்குசாவடியில் உள்ள ஒரு தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் வெங்கடேஸ்வரி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற அவர் திடீரென மாயமானார்.

இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரித்த போது அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோல ஓமலூர் அருகே உள்ள கெட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிராஜ். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). கணவரை பிரிந்து செங்கரடு காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஜெயலெட்சுமி வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஜெயலட்சுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News