செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் உயிரிழப்பு

Published On 2018-11-22 12:57 IST   |   Update On 2018-11-22 12:57:00 IST
பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
மதுரை:

ராமாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீனுல்லா (வயது 68). இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் தீனுல்லாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தீனுல்லா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீனுல்லா பரிதாபமாக இறந்தார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 49 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu

Tags:    

Similar News