செய்திகள்
சந்திரா

கஜா புயலால் வாழைகள் சேதம் - பெண் விவசாயி அதிர்ச்சியில் உயிரிழப்பு

Published On 2018-11-19 06:33 GMT   |   Update On 2018-11-19 06:33 GMT
கஜா புயலால் வாழை, தென்னை, சோளம் சேதமடைந்ததால் சோகத்தில் இருந்த பெண் விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
கந்தவர்க்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

கந்தவர்க்கோட்டை அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 45). விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை, தென்னை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

சமீபத்தில் வந்த கஜா புயலால் இந்த பயிர்கள் கடுமையான வகையில் சேத மடைந்தன. சேதமடைந்த பயிர்களை சந்திரா கடந்த 17-ந்தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கந்தவர்க்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  #GajaCyclone

Tags:    

Similar News