செய்திகள்

கஜா புயல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் மின் கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன

Published On 2018-11-16 10:03 GMT   |   Update On 2018-11-16 10:03 GMT
கஜா புயலையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்களும் சாய்ந்தன. #gajacyclone

கடலூர்:

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று இரவு நாகப்பட்டினம் பகுதியில் கரையை நெருங்கியது. அப்போது நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது. இந்த கஜா புயலின் கபளிகரம் கடலூர் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. நேற்று நள்ளிரவு பலத்த சத்தத்ததுடன் காற்று வீசியது.

சாலைகளில் இருந்த மரங்கள் அனைத்தும் காற்றில் ஆடி, அசைந்தன. அப்போது பலத்த மழையும் கொட்டியது. கஜா புயலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இதனால் கிராமங்கள் அனைத்தம் கும்இருட்டானது. கடலூர் நகரில் சூறாவளிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலூர் செம்மண்டலம், சாவடி, கோண்டூர், புதுச்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்களும் சாய்ந்தன.

கடலூர் பகுதியில் தாழங்குடா பகுதியில் கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்களும் சூறாவளிக் காற்றில் சாய்ந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

அதுபோல் மின்சார ஊழியர்களும் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். #gajacyclone

Tags:    

Similar News