செய்திகள்

கஜா புயல் எதிரொலி - அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

Published On 2018-11-15 17:17 IST   |   Update On 2018-11-15 17:17:00 IST
கஜா புயல் எதிரொலி காரணமாக நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #GajaStorm
சிதம்பரம்:

இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ள்ளார்.

இதேபோல், கஜா புயல் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
Tags:    

Similar News