செய்திகள்

129 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2018-11-11 10:35 GMT   |   Update On 2018-11-11 10:35 GMT
மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது. #Periyardam
கூடலூர்:

பெரியாறு அணையின் நீர்மட்டம் 129 அடியாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்தது. அதன் பின்னர் மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது.

அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 68.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1478 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. 16 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.13 அடியாக உள்ளது. 23 கனஅடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வருகிற 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். #Periyardam

Tags:    

Similar News