செய்திகள்

கொத்தவால்சாவடியில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது

Published On 2018-11-08 15:39 IST   |   Update On 2018-11-08 15:39:00 IST
சென்னை கொத்தவாசல்சாவடியில் 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

கொத்தவால்சாவடி, மணிகண்ட முதலி தெருவில் தனியாருக்கு சொந்தமான கார் நிறுத்தும் காலி இடம் உள்ளது.

நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்தவர்கள் கார்களை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் ஜெகதீஷ், மகாவீர் ஆகியோருக்கு சொந்தமான 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. கார்களில் தீப்பிடித்ததும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட்டதால் அவை தப்பியது.

நேற்று இரவு பட்டாசு வெடித்த போது ராக்கெட் வெடி விழுந்து கார்களில் தீப்பிடித்ததா? அல்லது நாசவேலை காரணமா? என்று கொத்தவால்சாவடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News