செய்திகள்

அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் தாக்குதல்- சிவகாசியில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்

Published On 2018-10-27 11:47 GMT   |   Update On 2018-10-27 11:47 GMT
சிவகாசி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
சிவகாசி:

சிவகாசி பஸ்நிலையத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை மதுரையில் இருந்து சிவகாசி பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு பஸ் வந்தது.

பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி மீது அரசு பஸ் மோதியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி நகர் போலீசார் அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போலீஸ் காரர்கள் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மற்ற அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. சிவகாசி முழுவதும் இந்த செய்தி பரவ, அரசு பஸ்கள் ஆங்காங்ககே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இதற்கிடையில் அரசு பஸ் போக்குவரத்து தொழிற் சங்கத்தினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது.  #tamilnews
Tags:    

Similar News