செய்திகள்

பல்லாவரத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ. 35 லட்சம் மோசடி- தோழி உள்பட 2 பேர் கைது

Published On 2018-10-25 14:55 IST   |   Update On 2018-10-25 14:55:00 IST
பல்லாவரம் அருகே ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஜீவா. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.

இவரிடம் அதே பகுதி ஆர்.கே.பி. நகரை சேர்ந்த தோழி நாகஜோதி, கம்பர் தெருவை சேர்ந்த தேவி ஆகியோர் ரூ. 35 லட்சம் கடன் வாங்கினர். பின்னர் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இது குறித்து ஜீவா அவர்களிடம் கேட்டபோது, சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து ஜீவா பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக நாகஜோதி, தேவி ஆகியோரை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News