செய்திகள்

அய்யப்பன் கோவிலுக்கு சென்ற 15 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- இல. கணேசன்

Published On 2018-10-23 11:48 GMT   |   Update On 2018-10-23 11:48 GMT
அய்யப்பன் கோவிலுக்கு சென்ற 15 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இல. கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #BJP #LaGanesan #Sabarimala
கோவை:

சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க கோரி கோவையில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.

கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. இதனை பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி. தொடங்கி வைத்தார்.

இதில் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சரண கோ‌ஷம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலம் வி.கே.கே. மேனன் சாலை, பாரதியார் சாலை வழியாக காந்திபுரம் திருவள்ளூவர் பஸ் நிலையம் முன் முடிவடைந்தது.

ஊர்வலத்தை தொடங்கி வைத்து இல. கணேசன் எம்.பி. கூறியதாவது-

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கொதித்து போய் இருக்கிற இந்து தாய்மார்களுக்கு வடிகாலாய் அமைய இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது.

கோவை உள்பட பெருநகரங்களில் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாரம்பரியத்தை கவனத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டு உள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அய்யப்பன் மீது பக்தி இல்லாதவர்கள் வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 15 பெண்கள் சென்று உள்ளனர்.

மத பிரச்சனையை தூண்டும் வகையில் அவர்கள் சென்று உள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாடு குறித்து கேட்ட போது, இது தொடர்பாக கேரள காவல் துறை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள முதல்-அமைச்சர் உத்தரவிட்டதால் தான் தடியடி நடத்தியதாக கூறி உள்ளார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சபரிமலை கோவிலில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்றார்.

ஊர்வலத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார், மாநில செயலாளர் ஆர். நந்தகுமார், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ், துணை தலைவர் கருமுத்து தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #LaGanesan #Sabarimala
Tags:    

Similar News