செய்திகள்
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது
சென்னையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் (வயது 20). இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவியின் தாயார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முத்து மாணிக்கம் விசாரணை நடத்தினார். இதையடுத்து கல்லூரி மாணவர் ரூபனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். #tamilnews