செய்திகள்

நாளை, ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2018-10-17 12:40 GMT   |   Update On 2018-10-17 12:40 GMT
நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காவேரிப்பட்டணம்:

நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் வணிக பெருமக்கள் தங்களது தொழிலகங்களுக்கும், மாணவ, மாணவியர் தங்களது கல்வி புத்தகங்களுக்கும், மகளிர் தங்களது வீடுகளிலும் வெகுவிமர்சையாகபூஜை செய்வர். இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு பூஜை செய்த பொரியை அன்பளிப்பாக வழங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். 

இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக வேண்டி காவேரிப்பட்டணம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக பொரி உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

தற்போது சீசன் களைகட்டியுள்ளதால் இரவு, பகலாக வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள், மின் கட்டணம், ஆட்கள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால் கடந்தாண்டு ரூபாய் 330-க்கு விற்கப்பட்ட 50 படி கொண்ட மூட்டை இந்த ஆண்டு சுமார் 380 முதல் 400வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு 30முதல்50 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News