செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Published On 2018-10-16 11:27 GMT   |   Update On 2018-10-16 11:27 GMT
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GutkhaScam
சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர்  சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மாதவராவ், சினிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 பேரையும் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam
Tags:    

Similar News