செய்திகள்
பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜாவுக்கு செங்கோட்டையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர் - பந்தள மன்னர் பேட்டி

Published On 2018-10-16 05:27 GMT   |   Update On 2018-10-16 05:27 GMT
ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர் என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார். #Sabarimala
செங்கோட்டை:

சபரிமலை சந்நிதிக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நல்ல தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலையில் நடக்கும் மகரஜோதி தரிசனத்திற்கான ஆபரண பெட்டியை அனுப்ப முடியாது என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொள்ளும் சரண கோ‌ஷ ஊர்வலம் திருச்செந்தூரில் இன்று (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா இன்று காலை செங்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர். நாளை பம்பையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்ந்தெடுக்க உள்ளோம். சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala



Tags:    

Similar News