சினிமா செய்திகள்

திரௌபதி 2- திரைவிமர்சனம்

Published On 2026-01-23 22:14 IST   |   Update On 2026-01-23 22:14:00 IST
ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

திரௌபதி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. நாயகன் ரிச்சர்ட் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஊரில் வக்பு வாரியம் மூலம் கோவில் நிலம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நாயகி ரக்ஷனா, கோவிலை பராமரிக்க முன் வருகிறார். கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா உடம்பில் அமானுஷ்ய சக்தி ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார்.

இறுதியில் ரக்ஷனா உடம்பில் ஊடுருவிய அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக வந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். வீரம், ஆக்ரோஷமான காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக நடித்து இருக்கும் ரக்ஷனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டி நட்ராஜின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

இயக்கம்

வல்லாள மகாராஜா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவிற்கும் சுல்தான் அரசர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கி இருக்கிறார். இந்து, இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த பிரச்சனையை திரைக்கதையாக வைத்து இருக்கிறார். படத்தில் அழுத்தமான மற்றும் சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தம்.

இசை

ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

ஒளிப்பதிவு

பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு சிறப்பு.

ரேட்டிங்-2/5

Tags:    

Similar News