செய்திகள்

ஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-13 06:29 GMT   |   Update On 2018-10-13 06:29 GMT
ஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் உடனே வழங்க கோரி வேம்பேடு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட வெம்பேடு பகுதியில் 45 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்று இல்லாததால் தமிழக மற்றும் மத்திய அரசுகளின் சலுகைகள் பெற முடியவில்லை.

இதனை கருத்தில் கொண்டு சாதி சான்று வழங்ககோரி இப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோட்டாட்சியர் ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு இது குறித்து பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஊத்துக்கோட்டை தாசில்தார் சாதி சான்று வழங்காமல் விசாரணை என்ற பெயரில் அலைக் கழிக்கிறார் என்று வேம்பேடு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை கண்டித்தும், சாதி சான்று உடனே வழங்க கோரியும் வேம்பேடு பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் பூண்டி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசு, தலைவர் சின்னதுரை, ஒன்றிய துணைத் தலைவர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News