செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2018-10-11 11:03 GMT   |   Update On 2018-10-11 11:03 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
சென்னை:

போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். 

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.



தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
Tags:    

Similar News